2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - ரிஷபம்

2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - ரிஷபம்

நேர்மையும், உண்மையும் நிலைக்க எண்ணும் ரிஷப ராசி வாசகர்களே!
 
இந்த குரு பெயர்ச்சி இதுவரை உங்களின் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருந்த குரு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். உங்களின் நான்கு, ஆறாமிடம், எட்டாம் இடமான மறைவு ஸ்தானங்களை பார்வை இடுவது உங்களின் தொழில் மற்றும் உத்தியோகத்தில் இடமாற்றம், பெயர் மாற்றம் ஏதாவது ஒரு வழியில் சிரமத்தில் இருக்கும்படி சூழ்நிலை உருவாகும். 
 
கடல் கடந்த வாணிபம் செய்து வருபவர்களுக்கு பொருள் குறித்த நேரத்தில் சேர்ந்தாலும் அதற்குரிய வருமானம் தடை பெற்று தாமதமாகக் கிடைக்கும். வங்கிகளின் மூலம் கடன் பெறுவது, அதன் மூலம் சில பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது போன்ற சந்தர்ப்பம் உண்டாகும். 
 
பொதுவாக குரு மறைவு ஸ்தானங்களை பார்ப்பது உங்களின் பிறந்த ஜாதகத்தில் குரு மறைவு பெற்றிருப்பவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். லொத்தரில் சிலருக்கு அதிர்ஷ்டம் கூட ஏற்படும். எதற்கும் ஜாதகத்தை சரிபார்த்து கொள்வது நல்லது. உங்களின் ராசிக்கு பரிகாரம் செய்து கொள்வதும் நன்மை தரும். 
 
அரசியல்வாதிகளுக்கு உங்களின் மீது தேவையில்லாத முட்டுக்கட்டைகளை சொல்லி வர, உடன் இருந்தவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவீர்கள். அவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிலருக்கு சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் சிலருக்கு கடமை செய்ய முடியாமல் போகலாம். 
 
படிப்படியாக உங்களின் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். அடுத்தவர்களுக்கு கடன் வாங்கி தருவதை தவிர்ப்பது நல்லது. சொந்த தொழில் செய்பவர்கள் பணிபுரியும் ஆட்களை கண்காணித்து வருவது நல்லது. உடன் இருக்கும் சிலர் மூலம் உங்களுக்கு பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் மஞ்சள் பட்டு துணி நவகிரக குருவுக்கு மூன்று நெய் தீபமும் ஏற்றி வழிபட்டு வர உங்களின் வாழ்வு செழிக்கும்.